
அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து 300பேர் மற்றும் ஆட்டோ ஓட்டும் மகளிர்
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.
அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து சைதாப்பேட்டை திரு.கதிர் அவர்களின் தலைமையில் 300பேர் தலைவர் கமல்ஹாசன், துணைத்தலைவர்கள் திரு.மெளரியா IPS(Rtd), R.தங்கவேலு மற்றும் சைதாப்பேட்டை மாவட்டச் செயலாளர் திருமதி.சிநேகா மோகன்தாஸ் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர். மய்யத்தில் இணைந்தவர்களுக்கு நம்மவர் அவர்கள் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், துணைத்தலைவர்கள் மெளரியா.IPS(Rtd), தங்கவேலு மற்றும் தொழிலாளர் அணி மாநில செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டும் மகளிர் மய்யத்தில் இணைந்தனர். மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலக இணைச்செயலாளர் பிரகாஷ் அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்.
