0 2 mths

கடலூர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதியினருக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ” .. இரத்தத்தைக் கழுவிவிட்டு வந்தால்தான் சிகிச்சையளிக்கப்படும்” என்று சொல்வது மருத்துவ அவசர சிகிச்சை முறைகளுக்கு மட்டுமல்ல மனிதநேயத்திற்கும் முரணானது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தாலும் இதுபோன்ற செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு அரசு மருத்துவமனையை நாடி வரும் சாமானிய மக்களுக்கு முறையான சிகிச்சை, விரைவாக வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published.