
தடைகளை தாண்டி ஜூலையில் வெளிவருமா ‘கடுவா’ …??!
பிருத்விராஜ் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கும் ‘கடுவா’ படத்தின் டீசர் வெளியீடு விழா சென்னையில் நடந்தது.
இதில் படக்குழுவினர் மற்றும் தமிழ் நடிகர்கள் ஆர்யா, ஜீவா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய பிருத்விராஜ், திரையுலகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்ட ஒரே வகை மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் வகைதான் என்றும், தனது வரவிருக்கும் ‘கடுவா’ அது போன்ற மாஸ் மசாலா திரைப்படம் என்று கூறினார்.
மலையாள இண்டஸ்ட்ரி பிரமாதமான படங்களைத் தயாரித்து வருகிறது. இருப்பினும் மனநிறைவான முழு நீள படங்களை உருவாக்கும் ஒரு கட்டத்தை கடந்து வருகிறோம். ஒரு திரைப்பட ரசிகனாக மலையாளத்தில் உள்ள மாஸ் மசாலா கமர்ஷியல் என்டர்டெய்னர்களை மிஸ் செய்கிறேன் என்றும் மலையாளத்தில் இதுபோன்ற படங்கள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டதாகவும் கூறினார்.
‘கடுவா’ திரைப்படத்திற்கு மட்டுமல்லாமல் இனிமேல் மலையாளத்தில் வெளிவரவிருக்கும் பெரிய படங்கள் எல்லாம் இப்படித்தான் விழா, விளம்பரத்தோடு வெளியாக வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக கூறிய ப்ரிதிவிராஜ் முதல் நபர் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எங்கள் பார்வையாளர்களுடன் நாங்கள் வந்து தொடர்பு கொள்ள வேண்டும். கேரளாவில் இருந்து வரும் அனைத்து பெரிய வெளியீடுகளுக்கும் இந்த செயல்முறையை எங்களால் தக்கவைக்க முடியும் என்று நம்புவதாகவும் அதற்கு தான் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.
ஜூன் 30ல் வெளிவர தயாராயிருந்த கடுவா திரைப்படம் எதிர்பாராத சூழ்நிலையினால் ஜூலை 7ல் வெளியாகும் என ப்ரித்விராஜ் தரப்பு கூறியுள்ளனர்.
