0 1 min 2 mths

இயக்குநர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி நடிப்பில் உருவான வேழம் திரைப்படம் ஜூன் 24ம் தேதி வெளியானது

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன் இந்த முறை ஒரு சைக்கோ த்ரில்லர் கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். அசோக் செல்வனின் வேழம் படம் எப்படி இருக்குன்னு இங்கே பார்ப்போம்..

வேழம் – என்ன கதை ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக்கை (அசோக் செல்வன்) ஒரு இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி லீனாவை (ஐஸ்வர்யா மேனன்) மர்ம நபர் கொன்று விடுகிறார். 7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு ஹீரோ அசோக் தேடுவதும், கடைசியில் கண்டுபிடித்தாரா? எதற்காக அந்த கொலை நடந்தது? என்பதும் தான் வேழம் படத்தின் கதை.

ஐஸ்வர்யா மேனன் தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால் படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் அசோக் செல்வனின் காதலியாக நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே அவரை கொலை செய்து கையில் எக்ஸ் மார்க் போட்டு விட அவரை நினைத்து உருகும் காட்சிகளும், ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அழகான நடிப்பை கொடுத்து செல்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

மைனஸ்

நல்லா வந்திருக்க வேண்டிய படத்தை இரண்டாம் பாதியில் இயக்குநர் தேவையில்லாமல் சுற்றி வளைத்து சொல்லியிருப்பதை தவிர்த்து இருக்கலாம். எழுத்தில் அந்தளவுக்கு க்ரிப் இல்லாமல் போனது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. பல இடங்களில் அடுத்து இந்த காட்சி தான் வரும், அவங்க ஒன்றாக சேர்ந்துடுவாங்கன்னு ரசிகர்கள் கதை சொல்வது அப்படியே திரையிலும் வருவது வேழத்தின் பலத்தை வீணடித்து விடுகிறது.

இசை: ஜானு சந்தர் இயக்கம்: சந்தீப் ஷியாம் சென்னை:

நடிகர்கள்: அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி

Leave a Reply

Your email address will not be published.