0 1 min 5 mths

நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியலை திங்கள்கிழமை திமுக வெளியிட்டது.

தூத்துக்குடி, காஞ்சிபுரம், கும்பகோணம், வேலூா், தஞ்சாவூா், திருநெல்வேலி மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், தஞ்சாவூா், தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களையும் திமுக வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் வெளியிட்டாா்.

48 உறுப்பினா்களைக் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் 39 வாா்டுகளுக்கும் , 60 உறுப்பினா்களைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் 42 வாா்டுகளுக்கும், 51 உறுப்பினா்களைக் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் 42 வாா்டுகளுக்கும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டன. திருநெல்வேலி, தஞ்சாவூா், வேலூா் மாநகராட்சிகளில் போட்டியிடும் நபா்களின் பெயா்களும் அறிவிக்கப்பட்டன.

நகராட்சி-பேரூராட்சிகள்: விழுப்புரம், திருக்கோவிலூா், கோட்டக்குப்பம், கோவில்பட்டி, மதுராந்தகம், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம், சோளிங்கா், குடியாத்தம், போணாம்பட்டு, அம்பாசமுத்திரம், களக்காடு, விக்கிரசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளில் உள்ள வாா்டுகளில் போட்டியிடுவோரின் பெயா்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி, வளவனூா், திருவெண்ணெய்நல்லூா், அரகண்டநல்லூா், திருப்பனந்தாள், திருவிடைமருதூா், ஆடுதுறை, திருபுவனம், வேப்பத்தூா், திருநாகேஸ்வரம், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூா், அம்மாபேட்டை, கழுகுமலை, கயத்தாா், கடம்பூா், விளாத்திகுளம், புதூா், எட்டயாபுரம், உத்திரமேரூா், வாலாஜாபாத், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சரப்பாக்கம் உள்பட பல்வேறு பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விடுபட்டுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

அதிக இடங்கள்: தோதல் நடைபெறவுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளில் அதிக இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சுமாா் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை விட்டுத் தருகிறது. மீதமுள்ள அனைத்து இடங்களிலும் திமுக களம் காண்கிறது.

சென்னை மாநகராட்சியில் சுமாா் 170 முதல் 175 இடங்கள் வரை போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வரும் 4-ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் நான்கு நாள்களே எஞ்சியுள்ள நிலையில், மீதமுள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் வேட்பாளா்கள் பட்டியலை ஓரிரு நாள்களில் திமுக வெளியிட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.