
மக்கள் நீதி மய்யம் – காஞ்சி தென் கிழக்கு.
தலைவர், நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் மற்றும் மதிப்பிற்குரிய துணைத் தலைவர் திரு A G.மௌரிய IPS,.Retd அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ, (கட்டமைப்பு) அவர்களின் ஆலோசனையின்படி, மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் (ஊடகம் & தகவல் தொழில்நுட்பம்) மற்றும் மண்டல செயலாளர் திரு SKPB. கோபிநாத், (கட்டமைப்பு) அவர்களின் தலைமையில், ஞாயிற்றுகிழமை, 21-Nov-2021 அன்று, காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள், காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பகுதியில், சென்ற வாரம் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட கோவை பள்ளி மாணவிக்கு இரங்கல் பதிவு செய்தும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்தும், குற்றம் நடக்காமல் தவிர்க்கும் விதமாகவும், குற்றவாளிகள் அதிவிரைவாக தண்டனை பெறவும், உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசை நோக்கி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யத்தின் காஞ்சி தென்கிழக்கு சார்பாக மகளிர் அணி முன்னெடுத்தது.