0 3 min 1 mth

டேக் டைவர்ஷன்’  படத்தில் தேவா பாடிய கானா பாடல் அபார வெற்றி!

‘டேக் டைவர்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்!

‘டேக் டைவர்ஷன்’  என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில்  இயக்கியுள்ளார்.
80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது.

இப்படத்திற்காக தேவா பாடிய   ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘என்கிற கானா பாடல் இணைய உலகில்  லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனமாடியிருக்கிறார்.அதே போல ‘யாரும் எனக்கில்லை ஏனடி ? ‘ என்கிற  காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இப்படத்தில்’பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள்.

ஜான் விஜய் தான்  வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய்,  பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும்  நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்துள்ளவர்  ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே  ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில்  பணியாற்றியுள்ளார்.  படத்தொகுப்பு – விது ஜீவா.

ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னராக  இது உருவாகி உள்ளது.படத்தைப் பார்த்த நாயகன் ராம்சும் ஜான்விஜய்யும்  படத்தில் உள்ள கலகலப்பையும்  கமர்சியல் அம்சங்களையும் கண்டு வியந்து இயக்குநரைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியுள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Music director Deva’s Gaana song for ‘Take Diversion’ is declared a Chartbuster now!!!

Take Diversion – An engrossing & entertaining commercial package

Filmmaker Sivani Senthil’s ‘Take Diversion’, a beautiful love story, laced that will savour the tastes of not just the 80s and 90s Kids, but 2K kids as well. Recently, a song titled ‘Masthana Mass Minoru’ crooned by Music Director Deva became an overnight Chartbuster across the music platforms. The song garnered additional emblazonment with the choreography and performance of Bigg Boss Tamil Season 3 fame Sandy. Besides, another track ‘Yaarum Enakillai Ennadi’ – a mellifluous love song that speaks about the painful ailments of a broken heart has captured the hearts of listeners.

The film features Ramachandran as a prominent character. He shot to fame for his spellbinding performances in the movies like Petta and Sathurnga Vettai. Sivakumar makes his onscreen debut in the lead role with Paatini Kumar and Gayathri plying the female lead characters. John Vijay appears as the antagonist, and the others in the star cast include Vijay TV fame George Vijay, Bala J Chandiran, Seenivasan Arunachalam, and few more prominent artistes.

Jose Franklin has composed music for the film. He has already garnered wowing responses for his musical spell in the movies like Nedunal Vaadai, and En Peyar Anandan. Eeswaran Thangavel has handled cinematography, Vidhu Jeeva is the editor. The film is crafted by a bunch of young powerhouse talents, which will entertain the universal crowds for its commercial content package.

After watching the final output, both the actors Ramachandran and John Vijay were spellbound with the filmmaking style of the director the well-entertaining ingredients and hugged him out of appreciating the gesture.

The official announcement on the film’s worldwide theatrical release will be made shortly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *