
கொரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாகவும், பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயையும் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயனாளிகள்:
- பொருளாதார ரீதியில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்ய முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
- கொரோனா வால் எனது தந்தையை இழந்து விட்டேன் ஆதரவற்ற இந்த நிலையில் முதல்வரின் இந்த உதவித் தொகை மிகவும் பயனுள்ளதாக அமையும் எனது கல்வி செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து உள்ளார்கள் முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவிப்பதோடு நான் எனது தாயையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என உறுதி கூறுகிறேன்