0 6 mths

நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தாக்கம் அதிகமாக உயிரிழப்புகளும் அதிகமான நிலையில் ஊரடங்கு விதிக்கப்பட்டு தீவிரமாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மத்தியப் பிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் திருமண விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், மாநிலம் முழுவதும் ரகசியமாகத் திருமணங்கள் நடைபெறுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது தொடர்பாக மத்தியப் பிரதேச அதிகாரிகள் 130 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச அரசு புதிய உத்தரவு ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதாவது ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற அனைத்து திருமணங்களையும் செல்லாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி வரும் ஊரடங்கு காலத்தில் திருமணங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியும் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *