0 1 min 6 mths

மருத்துவர்களுடன் நடைபெற்ற உரையாடலின் போது பிரதமர் மோடி கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை  இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கண்ணீர் விட்ட நிகழ்வு தொடர்பாக சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இதையடுத்து அமெரிக்காவில் வெளியாகும் பிரபல ஆங்கில செய்தி நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’ கடந்த 21-ம் தேதி வெளியிட்ட பதிப்பில் முன்பக்கத்தில் ‘இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார்’ என்று எழுதப்பட்டு அதற்கு கீழே முதலை ஒன்று இருப்பது போல புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்திய பிரதமர் மோடி முதலைக்கண்ணீர் விடுகிறார் என்று விமர்சிப்பது போன்று அந்த புகைப்படம் இருந்தது. ’நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியானதாக சமூகவலைதளத்தில் பரவி வந்த நிலையில் அந்த புகைப்படம் போலியாக எடிட் செய்தது என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *