
டவ்தே புயலால் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பல பாதிப்புகளை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 23ம் தேதி அந்தமான் அருகே தெற்கு கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 5 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.