0 7 mths

முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் நிதியுதவி ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு இன்னும் 1 வாரத்தில் முடிவடைய உள்ளது. இருந்த போதிலும் தற்போது வரை கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படாத காரணத்தினால் மேலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மே 31 வரை நீடிக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கனவே ஆந்திரா, சத்தீஷ்கர், பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, மத்திய பிரதேசம், நகடா ஆகியவற்றில் முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *