0 1 min 7 mths

ஊரடங்கு உத்தரவுக்கு பின் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் நிம்மதியை கொடுத்தாலும் கொரோனா வின் முழு வீழ்ச்சிக்காகவே தமிழக அரசு எல்லா வகை முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்யவும் மாவட்டங்களுக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ள இணையதள முகவரியில் பதிவு செய்துவிட்டு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாவட்டத்திற்கு உள்ளேயேயும் பயணம் செய்யலாம்.

கூடுதல் தகவலாக இன்று முதல் சென்னை மாநகர எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டும் என்றால் இ-பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு இன்றி வாகனங்களில் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *